நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 34.037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன