மக்களின் பேராதரவோடு களம் இறங்கும் எழிலரசி தேவராஜ்

செங்கல்பட்டு மாவட்டம் திரூப்போரூர் வட்டம் திருக்கழுகுன்றம் செல்லும் பிரதான சாலையையொட்டி  திரூப்போரூரிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மானாமதி ஊராட்சியாகும். விவாசயம் தான் இங்குள்ள மக்களின் அடிப்படை குலத்தொழில் மானாமாதி ஊராட்சியில்  அகரம்தாங்கல் , தட்சணாவார்த்தி, சந்தினாம்பட்டு, சிஎஸ்ஐஅகரம், அகரம், மானாமதி, பெரியார் நகர், ஈச்சம்பள்ளம் , குயிலுக்குப்பம், காமராஜ நகர், மானாமதிநடுக்காலனி, செங்கழனி ஒடை, ஆமையாம்பட்டு, ஆனந்தபுரம், கலிங்கானம்பட்டு ஆகிய 14கிராமங்களை உள்ளடக்கியது. சுமார் 10000க்கும் மேற்பட்ட பொது மக்களையும்  6000க்கும் மேற்பட்ட வாக்களர்களையும் கொண்டது. 
இவ்வூராட்சியை சுற்றிலும் தெற்கே அருங்குன்றம் வடக்கே ஆமூர் கிழக்கே பையனூர், மேற்கே முள்ளிப்பாக்கம் ஊராட்சிகளை கொண்டது. இந்த ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் பிறந்தவர் தான் வழக்கறிஞர் தேவராஜன். சிறுவயதுமுதலே தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர் அதனுடன் கல்வி கற்று வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்துகொண்டிருந்த போது தன்னுடன் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு பொதுப்பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களை விடுவிக்க சட்டரீதீயில் யாரும் தங்கள் கிராமத்தில் இல்லை என்பதை கண்டு மனம் வருந்தினார். 
ஆதலால் தான் மேற்படிப்பை தொடர்ந்தால் சட்டம் பயில வேண்டும் என முடிவுசெய்து பெற்றோர்களிடம் மன்றாடி சட்டம் பயில அரசுக்கல்லூரி சேர்ந்து பலசோதனைகளை கடந்து சட்டம் கல்வி முடித்துபட்டம் பட்டம் பெற்றார். 2002ல் தன்னை வழக்கறிஞாராக பதிவு செய்து கொண்ட தேவராஜ் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்ற துவங்கினார். அங்கேயும் அங்கீகாரம் கிடைக்காமல் பலகட்ட போராட்டங்களை தன்னை நிலைநிறுத்தினார். தன்னுடைய அயாரது உழைப்பால் அவருக்கு அரசு வழக்கறிஞர் அங்கீகாரம் கிடைத்தது. இதுபுறம் இருக்க தான் வாழும் ஊர் எந்த விதமான தொழில் வளர்ச்சியோ தன்னிறைவு ஊராட்சியோ மாறாமல் இன்னும் அடிமட்டத்தில் இருப்பதை கண்டு மனம் கலங்கி அதற்ககான பலகட்ட முயற்சிகளை மேற்க்கொண்டு, பல்வேறுத்துறை அதிகாரிகளையும் சந்தித்து நாள்தோறும் மக்களுக்கான தேவைகள் குறித்து மனுக்கள் அளித்து வந்தார். ஓருநிலையில் மக்கள் பணி செய்ய வேண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பதவி வேண்டுமென தீர்மானித்தார். சமூகப்பணியும் சேர்த்து அதற்கான முயற்சிகளிலும் இறங்கினார். இம்முடிவுவினை அவரை வளர்த்தெடுத்த மானாமதி ஊராட்சி பொதுமக்களின் முன்னிலையில் போட்டு உடைத்தார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாரம் பதவி ஏதும் இல்லாதபோதே எங்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் நீங்கள் உங்களுக்காக நாங்கள்  எதையும் செய்ய காத்திருக்கிறோம் என்று ஆதரவு தெரிவித்தனர். 
அதனைத் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு பட்டதாரியான தனது மனைவி திருமதி.டி.எழிலரசிதேவராஜன் அவர்களை தற்பொழுது நடைபெறயுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மானாமதி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட களத்தில் உள்ளார். 14 கிராமமக்களுக்கும் தேவராஜ் ஓன்றும் புதியவரல்ல கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை கொண்ட ஊராட்சி மானாமதி யாகும். அவர்களின் செல்வாக்கையும் ஆதரவையும் சேர்த்து பெற்றவர் .வழக்கு சம்பந்தமாகவரும் ஏழை எளிய மக்களுக்காக தானே முன்வந்து வழக்கு தொடுத்துவாதித்து உரியநிவாரணமோ நீதியோபெற்றுதரும் வரை அவர்களுடன் பணியாற்றுவார். இளைஞர்களின் எதிர்கால நிலையை பல்வேறு தனிப்பட்ட இன்னல்களை சந்தித்து மானாமதியில் ஓயின்ஷாப் அமையாமல் பாதுகாத்து வருகிறார் . 
நாம் நேரிடையாக வழக்கறிஞர் தேவராஜ் அவர்களிடம் பேசுகையில்  எனக்கு பெரிசா இலட்சியம் எல்லாம் ஓன்னும் இல்ல சார் நான் பொறந்து வளர்ந்த இந்த கிராமத்திற்கு என்னை அடையாள படுத்தி இந்த மானாமதி ஊராட்சி மக்களுக்கும் நான் ஏதாவது செய்யணும் வக்கீலா இருந்தா எப்படி எல்லாம் சம்பாதிக்கலாம்னு உங்களுக்கே எதிரியும் என் வீடு இதுவரைக்கு சாதாரண வீடு எனக்கு ஓரே எண்ணம் மக்கள் பணி எனக்கு வர வருமானத்தை வச்சி சிக்கனமா குடும்பத்தி நடத்தி வர்றேன் சொத்துன்னு சொன்னும் பெரிசா இல்லை நான் படிக்கும்போது பலகட்ட கஷ்டத்தின் போது எனக்கு உறுதுணையா இருந்த மக்களுக்கு ஏதாவது சின்ன உதவி என்ன செய்யமுடியுமா யோசித்து தனிப்பட்ட முறைகளை அதிகாரிகளை பார்த்து மனுவழங்கிவருகிறேன் பெரிசா ஓன்னும் அதற்கான பலன் இல்லை அதான் மக்கள் பணியை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓரு ஆளா இருந்து செய்யக்கூடாது எனமுடிவு எடுத்து இந்த முடிவுக்கு வந்தேன்.
என்மனைவி எழிலரசி பட்டதாரி ஆசிரியருக்கு படித்திருக்கிறார். பொறுமைசாலி தைரியம் கொண்டவர் சகிப்புத்தன்மை உடையவர் என்னை விட என்மனைவிக்கு பொதுப்பணிகள் செய்வதில் வல்லவர் எனக்கு ஆலோசனை வழங்குபவரே அவர் தான் . எம்மக்கள் தங்களுக்காக அதிகாரம் அளித்து மானாமதி ஊராட்சி தலைவர் என்ற அங்கீகாரம் வழங்கிய பின் நான் கீழ்க்காணும் பணிகளை செய்ய உள்ளேன் .
மானாமதி ஊராட்சிக்கு தனியாக போக்குவரத்து நிலையம் இல்லாதால் காலை மாலை இருவேளைகளிலும் பொதுமக்கள், இளைஞர்கள் ,பள்ளிகல்லூரி  மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர் எனவே மானாமதியில் பேரூந்துநிலையம் அமைக்கவேண்டும் அதில் திரூப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு சென்றுவரும்  பேருந்துகளை இயக்கசெய்யவது.
14 கிராம மக்களுக்கும் தனித்தனியே அவர்களின் கிராமத்தின் மத்தியபகுதியில் நியாயவிலைக்கடை அமைத்து தருதல்.
மானாமதி ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குறிப்பாக 1,5 ,4 ,6 ,7  ஆகிய வார்டுகளின் உள்ள பொதுமக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினையை போக்க அவர்களின் வார்டு மத்தியில் டேங்குகள் பொருத்தப்பட்டு 24நான்கு மணிநேர தண்ணீர் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.இதுமற்ற அனைத்து வார்டுகளுக்கும் பொருந்தும் .
மானாமதி மட்டுமல்ல இந்தியாவே இளைஞர்கள் வளர்ச்சியில் தான் எனவே மானாமதி ஊராட்சியில் உள்ளஅனைத்து வார்டுகளிலும் ஊராட்சி சார்பில் விளையாட்டு திடல் ,உடற்பயிற்சி கூடம் ஊராட்சி சார்பில் அமைத்து தரப்படும். படிப்பிற்கேற்பவும், கைத்தொழில் கற்றதற்கு ஏற்றவாரும்வங்கிமூலம்கடன் பெற்று தரவகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுதுவரை தொழிற்கல்வி கற்க எமது ஊராட்சிசேர்ந்த மாணவர்கள் வெளியூருக்கே சென்றே படித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கத்திடம் முறையிட்டு மானாமதியில் தொழிற்கல்வி பயிற்சி பள்ளிகல்லூரி அமைத்துத்தரப்படும்.
கிராமத்தின் வளர்ச்சி முக்கிய பங்கு சாலைகளுக்கு உண்டு எனவே எங்கள் ஊராட்சியை சுற்றியுள்ள குண்ணப்பட்டு, ஆமூர் , அருங்குன்றம் , முள்ளிப்பாக்கம் , செம்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு செல்லநிரந்தர இணைப்பு தார்ச்சாலைகள் அமைக்கப்படும். 
மானாமதியின் ஜீவாதாரமே விவசாயம் தான் விவசாயம் பொய்த்ததால் தான் இன்று மக்கள் வெளிவேலையை தேடி ஓடி நலிந்துவருகின்றனர் . திரூப்போரூர் ஓன்றியத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மானாமதி பெரிய ஏரியின் கரையை பலப்படுத்தி ஆழப்படுத்தி நீரை சேமித்து அதன்மூலம் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு வேண்டிய வழிவகைகள் செய்யப்படும். விவசாய செய்ய வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும் .
  மானாமதி விவசாயத்தில் மூலம் ஆறுவடை செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாக்க நிரந்திர நெல்கூடம் நிலையம் அமைத்துதரப்படும். நெல் மூட்டைகளை அரசாங்கம் நேரிடையாக நல்ல விளைக்கு கொள்முதல் செய்ய வேண்டியவழிகள் செய்துதரப்படும்.
மானாமதி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் பெரிய குடிநீர்டேங்குகள் அமைத்து தரப்படும்.
கால்நடைமருத்ததுவமனையை தரம் உயர்த்தி பெரியளவில் அமைக்கப்படும். மேலும் ஆண்டு முழுவதும் மாட்டுதீவனங்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
யாருமே இல்லாத முதியோர்களுக்கு தங்கும் மையம் ஏற்படுத்தி தரப்படும்.
மானாமதியில் மீன் இறைச்சி காய்கறிகள் விற்கவும் வாங்கவும் தனித்தனியாக விற்பனையகங்கள் ஊராட்சி சார்பில் கட்டிதரப்படும். 
மானாமதி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பலகிராம விவசாயிகள்  பயன்பெறும் வகையில் நிரந்திர அரசு உரக்கிடங்கு ஏற்படுத்தி தரப்படும்.
தற்பொழுது திரூப்போரூர் காவல்நிலைய ஆய்வாளாரை பொறுப்பாளாராக கொண்டு செயல்பட்டுவரும் மானாமதி காவல்நிலையத்தை தரம் உயர்த்தி தனி ஆய்வாளர் கொண்ட காவல்நிலையமாக மாற்றப்படும். 
அனைத்து வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களின் இருப்புறங்களிலும் மழைநீர் கால்வாய் அமைத்து சிலாப் அமைத்து மூடப்படும். 
பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தும் மாணவர்களுக்கு கேற்ப புதுப்பிக்கப்பட்டு தனித்தனியே அமைத்துதரப்படும்.
மானாமதி ஊராட்சியில் ஐந்தாண்டுகளுக்குள் ஓருவீடு கூட குடிசை வீடுகள் இல்லாத வகையில் அனைவருக்கும் கட்டிட வீடுகள் கட்டநடவடிக்கை எடுக்கப்படும். 
மானாமதி ஊராட்சியில் எந்த விதமான சொந்தமும் இன்றி நிற்கதியாக நிற்கும் ஆதரவற்றோர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூபாய் 500 வழங்கப்படும். 
மானாமதி ஊராட்சியில்  விவசாயம் பாதிக்க வகையில் இளைஞர்கள் பெண்கள் வேலை வாய்ப்புகள் பெறவும் அதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பொருளாரதார ரீதியில் உயர்த்திக் கொள்ளும் வகையில் தொழில்நிறுவனங்கள் கொண்டுவந்து அமைக்கப்படும். 
ஊராட்சியின் அடிப்படை தேவைகளான சாலைவசதி ,மின்சார வசதி ,தெருவிளக்குவசதி குடிநீர் இவைமூன்றும் பெற்ற தன்னிறைவு  ஊராட்சியாக மானாமதி மாற்றப்பப்படும் .
மானாமதி ஊராட்சியில் இயங்கிவரும் மகளிர் குழுக்களுக்கு ஊராட்சி மூலமாகவும் அரசு மூலமாகவும் அனைத்து வங்கிகடன்களும் குறைந்த வட்டிக்கு பெற்றுத்தரப்படும் தனிமையம் அமைத்து மகளிர் சுய தொழில் செய்யவேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் ஊராட்சி சார்பில் நடைபெறும் எந்த ஓரு நிகழ்ச்சிக்கும் மகளிர் குழுவினரே முன்னிலையில் நின்று செயல்படநடவடிக்கை எடுக்கப்படும் பெண்கள்கள் தான் குடும்பத்தின் மூலஆதாரம் அவர்களின் தரஉயர மேற்படிப்பு படிக்க விருப்பபெண்களுக்கும் ,சுயத்தொழில் கற்றுக்கொள்ள பெண்களுக்கும் தனித்தனியே ஊராட்சி சார்பில் மையம் ஏற்படுத்தி தரப்படும் என்று தேவராஜ் கூறியுள்ளார். 
மானாமதி ஊராட்சியில் இவையனைத்தையும் எழிலரசிதேவராஜ்  ஆகிய நான் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக செய்வேன் என்று சத்தியம் செய்து கூறுகிறார் மானாமதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும் தேவராஜ் அவர்களின் மனைவியும் பட்டதாரியான எழிலரசிதேவராஜ்  மானாமதி மக்கள் பேராதரவோடு.