எப்படி படைக்க வேண்டும்

நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம்.


நைவேத்தியத்தை படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும்.


கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது.


நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.


நைவேத்தியத்தை படைப்பதற்கு முன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் வடடமாக கோலமிட்டு அதன் பிறகு அந்த கோலத்தின் மீது நைவேத்தியம் அடங்கிய வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.


நைவேத்தியத்தை படைக்கும்போது வாழை இலையை அல்லது பிரசாதத் தட்டைச் சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். (இந்த செயல் மண்டலத்தை சுத்தி செய்தல் என்று அறியப்படுகிறது) தண்ணீரை இடமிருந்து வலமாக மீண்டும் தெளிக்கக்கூடாது.