உதாரணமாக, பாயசம் அல்லது விஷ்ணுவுக்கு பால் பாயசமும், கணபதிக்கு மோதகமும், அம்மனுக்கு கூழும் படைக்கப்படுகிறது. குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட தெய்வத்திற்கு பிரசாதமாக சமர்ப்பிப்பதன் மூலம் நிறைய நல்ல பலன்களை பெற முடியும்.
படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு அது பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு அனைவரும் சிறு பங்காக எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நைவேத்தியம் பிரசாதமாக அனைவருக்கும் பங்களிக்கப்பட்ட பிறகு, அதில் கடவுளின் சக்தி நிரம்பி அதை சாப்பிடும் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுரையில் நைவேத்தியம் படைப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இந்த செயலின் பல்வேறு கோணங்களைப் பற்றிய தகவல்களை தருகிறோம்.